உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது மொபைல் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி மொபைல் போனின் ஆதிக்கம் அதிகமாகி வரும் நிலையில் அதற்கு ஏற்றது போல ஹேக்கர்களும் அதிகரித்து வருகிறார்கள். உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியும். மொபைல் போனை பயன்படுத்தாமல் தானாக பேட்டரி குறைந்தால் ஹேக் செய்திருக்க வாய்ப்புள்ளது. வழக்கத்திற்கு மாறாக மொபைல் போன் சூடானாலும் ஹேக் செய்திருக்கலாம்.

அதிக டேட்டா பயன்பாடு, நீங்கள் இன்ஸ்டால் செய்யாத செயல்கள் உங்களது மொபைல் போனில் இருப்பது போன்ற காரணங்களால் ஹேக் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி தேவையில்லாத மொபைல் செயலிகள் இருந்தால் உங்களது மொபைல் ஹேக் செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எந்த செயலி ஓபன் செய்தாலும் வித்தியாசமான விளம்பரங்கள் வருவது. அனைத்து செயலிகளும் மெதுவாக இயங்கினாலும் ஹேக் செய்திருக்க வாய்ப்புள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்கு சந்தேகப்படும் படியாக இருக்கும் செயலிகளை உடனடியாக நீக்குவது நல்லது.