உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ப புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது வாட்ஸ் அப்பில் ஐரோப்பிய யூனியன் டிஜிட்டல் மார்க்கெட் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த புதிய சட்டம் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை பிறப்பித்துள்ளது. அதேசமயம் பயணங்கள் இதர செய்திகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியையும் வழங்குவது இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றுவதற்கான பணிகளில் whatsapp நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. தற்போது பீட்டா வெர்சனில் அப்டேட்டில் உள்ள நிலையில் மற்ற தளங்கள் இடையே தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்டங்களில் முழுமையான என்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் வழங்குவதை வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு செய்திகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.