இன்றைய டிஜிட்டல் உலகில் கூகுள் பே, போன் பே மூலமாக எங்கிருந்தாலும் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பண பரிமாற்றம் செய்துவிட பலரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இனி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. உங்களது செல்போனில் இருக்கும் ஏதாவது ஒரு யுபிஐ அப்ளிகேஷனை கொண்டு நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். Hitachi நிறுவனம் இந்த ஏடிஎம் மிஷின்களை ஏற்கனவே தயாரிக்க தொடங்கிவிட்டது. விரைவில் இதனை நீங்கள் ஏடிஎம் மையங்களில் பார்க்கலாம்.