தங்க பத்திரங்கள் மூலமாக தங்கத்தை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிடும்போது அதை ஆன்லைனில் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடியில் வாங்கலாம். இந்த தங்க பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5 வட்டி கிடைக்கும். இந்த வட்டியானது ஆண்டுக்கு இருமுறை என பிரித்து வழங்கப்படும். வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் டீமேட் கணக்குகள் மூலம் வாங்க முடியும்.