தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பல திரைப்பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.

இதையடுத்து விஜய்யின் 68-வது படத்தை டைரக்டர் வெங்கட்பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக “தளபதி 68” பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 2024 ஆம் வருடம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தளபதி-68 படத்தின் பூஜை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று தளபதி-68 திரைப்படத்தின் பூஜை நடைபெறயிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நாளில் இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக வெளியிட உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.