டைரக்டர் சுதீப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்பட பலர் நடித்திருக்கும் படம் “தி கேரளா ஸ்டோரி”. கடந்த 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டு உள்ளது.

இத்திரைப்படத்துக்கு கேரளா,தமிழகம், மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் நீதிமன்ற உத்தரவுப் படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் அதா சர்மா சமூகஊடக பயனர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டார்.

அதோடு அதா சர்மாவின் தொடர்பு விபரங்களும் கசிந்தது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அதா சர்மாவின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களானது சமூக ஊடகங்களில் கசிந்தது. அதன்பிறகு அதா சர்மா துன்புறுத்தப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் அதா சர்மாவின் புதிய தொடர்பு எண்ணை கசிய விடுவதாக மிரட்டியதாக சொல்லப்படுகிறது.