தமிழக அரசியல் களத்தை உலுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது வியூகத்தை அதிரடியாக மாற்றத் தொடங்கியுள்ளது! பாஜக தரப்பிலிருந்து கூட்டணிக்குத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் திடீரெனக் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தம் 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் பங்கேற்று, தங்களது கருத்துக்களை ஆக்ரோஷமாகப் பதிவு செய்தனர்.
மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், பங்கேற்ற 120 பேரில் 98 மாவட்ட செயலாளர்கள் கூட்டணிக்கு ஆதரவாகத் தங்களது குரலை உயர்த்தியுள்ளனர். “தனித்து நிற்பதை விட, பலமான கூட்டணியுடன் தேர்தலைச் சந்திப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும்” என அவர்கள் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளனர். கட்சியின் இந்தத் திடீர் ஆலோசனையும், நிர்வாகிகளின் ஒருமித்த ஆதரவும் தமிழக அரசியலில் ஒரு பெரிய பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. தளபதி விஜய்யின் சிக்னலுக்காகக் காத்திருக்கும் நிலையில், இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டால், வரும் 2026 தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனல் பறக்கும் என்பது மட்டும் உறுதி!
