ரேஷன் கார்டு திருத்தத்திற்காக அரசு அலுவலகங்களின் வாசலில் காத்துக்கிடந்து கால்கடுக்க நிற்பவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 14, சனிக்கிழமை) ஒவ்வொரு வட்டத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், உங்கள் ரேஷன் கார்டில் உள்ள பெயர் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் சேர்ப்பு அல்லது நீக்கம் போன்ற அனைத்துப் பணிகளையும் எவ்வித சிரமமுமின்றி உடனே முடித்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல், உங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருந்தாலோ அல்லது கடையில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தாலோ, இந்த முகாமில் நீங்கள் தைரியமாகப் புகாரளிக்கலாம். ஆன்லைனில் போராடித் தோற்றுப்போனவர்கள் கூட, நாளை நேரில் சென்று அதிகாரிகளிடம் மனு கொடுத்துப் பயன் பெறலாம். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் மறுபடி அலைய வேண்டியிருக்கும் என்பதால், இப்போதே ஆவணங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்
