தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்த முடிந்த நிலையில் பாஜகவை மறைமுகமாகவும் திமுகவை நேரடியாகவும் விமர்சித்தார். இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் தமிழில் நியூஸ் சேனல்களும் விஜயின் அரசியல் மாநாடு மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் விமர்சனங்கள் குறித்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் விஜயின் மாநாடு குறித்து பேசி வருகிறார்கள். இதற்கு ஒரு படி மேலாக துருவ் ரதி ரசிகர்கள் நடிகர் விஜய்யின் மாநாடு குறித்து youtube-ல் வீடியோ வெளியிட வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவருடைய பேன் பேஜ் சம்பந்தமான எக்ஸ் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளனர். நடிகர் துருவ் ரதி தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு எதிராக கடுமையாக விமர்சித்த நிலையில் அவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு கூட தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தங்களுடைய கொள்கை எதிரி பாஜக தான் என்று மறைமுகமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக நடிகர் விஜயின் மாநாடு குறித்து துருவ் ரதி தன்னுடைய youtube பக்கத்தில் ஒரு விரிவான வீடியோவை வெளியிட வேண்டும் என்று அவர் ரசிகர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு பிரதமர் மோடி பற்றி எப்பவாவது மட்டும் தான் அவர் வீடியோ வெளியிடுவார். மேலும் தற்போது பிரதமர் மோடி குறித்தும் விஜயின் மாநாடு குறித்தும் அவருடைய ரசிகர்கள் மீண்டும் வீடியோ வெளியிட வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜகவின் ஓட்டு வடமாநிலங்களில் சரிவடைந்ததற்கு துருவ் ரதி பேச்சு கூட ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.