லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி உள்ள படம் “லியோ”. இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தளபதியின் லியோ திரைப்படத்தில் தமிழ் திரைபிரபலங்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் நடித்து வருகின்றனர். இப்போது லியோ படம் பற்றி ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து இப்படத்தில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தன் சமூக வலைதளத்தில் லியோ எனும் படத்தின் பெயரை இணைத்து உள்ளார். அவர் இதற்கு முன் நடித்த மீசைய முறுக்கு, வீட்ல விவேஷம் ஆகிய படங்களின் லிஸ்டில் லியோ பதிவு செய்து உள்ளார். இதன் காரணமாக ரசிகர்கள் அவரும் லியோ திரைப்படத்தில் நடிக்கிறார் என்று உறுதிசெய்துள்ளனர்.