லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் உயர்தர Red V RAPTOR XL வகை கேமரா லியோ சூட்டிங்கில் பயன்படுத்தப்படுவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து லியோ படத்தில் விஷூவல் டிரீட் காத்திருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.