லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் லியோ திரைப்படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை கோகுலம் மூவிஸ் பெற்றிருக்கிறது. கேரளாவில் தளபதிக்கு அதிகளவிலான ரசிகர்கள் உள்ளதால் அங்கு இம்முறை கூடுதலான தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது