தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கினார். நடிகர் விஜய் அடுத்த வரும்  2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழாவின்போது அந்த கல்லூரி மாணவிகள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்தின் பாடலை ஒலிபரப்பி மேடையில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த கல்லூரி மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலுக்கு உற்சாகமாக நடனம் அடியதோடு விஜயின் புகைப்படம் கொண்ட டீ சர்ட்டையும் அணிந்திருந்தனர். மேலும் ஒரு கட்சிக்காக மொத்த கல்லூரியும் சேர்ந்து இப்படி ஒரு கொண்டாட்டத்தை நடத்தியது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.