ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த  படத்தின் புரோமோஷன்கள், முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி, கடந்த 2 வாரமாக ஜெயிலர் படம் சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், இணையத்தை கலக்கி வரும் ‘ஜெயிலர்’ ட்ரெய்லர் குறித்து ராகவா லாரன்ஸ் ட்வீட் போட்டுள்ளார்.

அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி ரசிகராக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பாட்ஷா படத்தை விட டபுள் ஹிட்டாகும். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியை இப்படி காட்டியதற்கு நெல்சன், சன் பிக்சர்ஸ், அனிருத் உள்ளிட்டோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.