அரசு இயந்திரத்தை ஒரு அரசியல் கட்சியின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்துவது அநாகரிகமானது என்று குறிப்பிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, தவெக தலைவர் விஜய்யின் ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமைச் செயலாளர் தரப்பில் இருந்து தனித்தனியாகக் கடிதம் அனுப்பப்பட்ட விவகாரத்திற்குப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தும்போது முறையான கட்சித் தலைமைகளுக்கு மட்டுமே கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்றும், கூட்டத்தில் யாரைப் பங்கேற்கச் செய்வது என்பதை அந்தந்தக் கட்சிகள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாநில அரசிற்காகப் பணியாற்றுகிறாரா அல்லது தமிழக வெற்றிக் கழகத்திற்கு செயலாளராகச் செயல்படுகிறாரா என்ற கேள்தியை அவர் எழுப்பியதுடன், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாகக் கடிதம் அனுப்பிய விதம் முற்றிலும் முறையற்றது என சாடினார்.

“>

 

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்குக் கட்சித் தலைவர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, தற்போதைய புதிய அரசின் இத்தகைய செயல்முறைகள் அரசு நிர்வாகத்தின் நடுநிலையைக் கேள்விக்குள்ளாக்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.