அதிமுக-வை மீட்டெடுப்பதே தனது இலக்கு எனக் கூறி வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. தெளிவற்ற அரசியல் முடிவுகள் மற்றும் வலிமையான நிலைப்பாடு இல்லாத காரணத்தால், ஓபிஎஸ் தற்போது அரசியல் களத்தில் தனித்து விடப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதன் விளைவாக, அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது அவரது தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மூத்த அரசியல் தலைவரான ஓபிஎஸ்-ஸின் கூடாரம் காலியாகி வருவது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இருப்பினும், தை மாதம் முடிவதற்குள் ஒரு உறுதியான முடிவை எடுக்கப்போவதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் ஓ பன்னீர்செல்வம் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில் அவர் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணிக்கு தான் வருவார் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். மேலும் அதிமுகவில் மீண்டும் இணையவே ஓபிஎஸ் விருப்பம் காட்டும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக ஓபிஎஸ் எடுக்க போக முடிவு என்ன என்று தற்போது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
