
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். தன்னுடைய சுட்டித்தனத்தாலும் சேட்டையாலும் அனைவரையும் மகிழ்ச்சியில் குழந்தைகள் வைத்திருப்பார்கள்.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தந்தை ஒருவர் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டால்தன்னுடைய குழந்தை எவ்வாறு தனக்கு உதவி செய்யும் என்பதை அறிவதற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது போல நடித்துள்ளார். ஆனால் தந்தை செய்வது நடிப்பு என்று அறியாத அந்த குழந்தை நொடி பொழுதில் தாமதிக்காமல் ஓடி ஓடி சென்று உதவி செய்துள்ளது. அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
The dad wanted to see if his son would help him.
Great son! 💕pic.twitter.com/4A469rcn0x— Figen (@TheFigen_) June 25, 2023