துபாயில் இருந்து ஹாங்காங் வந்த EK9788 என்ற போயிங் 747 சரக்கு விமானம், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.50 மணியளவில் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, வடக்கு ஓடுபாதையில் இருந்து வழுக்கி கடலில் விழுந்தது.

இந்த விமானம் எமிரேட்ஸின் குத்தகைக்கு ACT ஏர்லைன்ஸால் இயக்கப்பட்டதாகவும், இதில் இருந்த நால்வரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஓடுபாதைக்கு அருகில் நிலத்தில் இருந்த இரண்டு தரை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

“>

 

விபத்தின் போது விமானத்தின் முன்பக்கமும் வால்பக்கமும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் கடலினுள் முழுகியதாக புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்குப் பிறகு ஹாங்காங் விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

“>

 

விபத்தில் சிக்கிய விமானம் 32 ஆண்டுகள் பழமையானது என்றும், இது கடந்த காலத்தில் பயணிகள் விமானமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரை விமானத்தில் எந்தவிதமான சரக்குகளும் இல்லையென எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் இருந்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.