சென்னையில் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் நிதி தராத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கிறோம். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நம்மை தூசு என நினைக்கும் மத்திய அரசுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும். எனவே இதனை சரியான களமாக மாற்றி தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது.
தமிழக வரலாற்றில் கலைஞருக்கு அடுத்ததாக தளபதி தலைமையில் 40 எம்பிக்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர். நம்முடைய ஆட்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு கூட ஒன்றிய சங்கி கும்பலால் பதில் சொல்ல முடியவில்லை. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். அவருக்கு கோபம் தான் வருகிறது. தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே கோபம் வருகிறது என்றால் நல்லி எலும்பு சாப்பிடுகிற எனக்கு எவ்வளவு கோபம் வரும். என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம். புயல் வந்தாலும் பணம் இல்லை பேரிடர்கள் வந்தாலும் பணம் இல்லை. மேலும் நான் அதிகமாக பேசினால் சட்டசபையில் தளபதி என்னை அழைத்து ஏன் இவ்வளவு அதிகமாக பேசினீர்கள் என்று கேட்பார் என்று கூறினார்.
