தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உட்பட பலர் தயாரிப்பாளர்களாக மாறி தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வருகின்றனர். இப்பட்டியலில் இப்போது நடிர் ஜீவாவும் இணைந்து உள்ளார். அதன்படி சூப்பர்குட் ஸ்டுடியோ எனும் பெயரில் பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பு தொழிலில் ஜீவா இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜீவா தயாரிக்கும் முதல் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்க உள்ளதாகவும், இதில் நாயகனாக ஜீவா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு காமெடி ஜானரில் உருவாக உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறாராம். இத்திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.