இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, பும்ரா, ஸ்டார்க் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை அதிரடியால் மிரட்டிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார்.
ஐபிஎல்-லில் காட்டிய மரண மாஸ் ஃபார்ம் காரணமாக, இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் வைபவ் இடம் பிடித்துள்ளார். இதற்காக இந்திய அணியுடன் இலங்கை சென்றடைந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு, விமான நிலையத்திலேயே அந்நாட்டு ரசிகர்கள் ஆவலோடு கூடி செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர்.
Vaibhav Suryavanshi looked visibly exhausted after arriving in Sri Lanka. 🙏
The 15-year-old was constantly surrounded by cameras, photo requests and fans. At one point, he even FOLDED HIS HANDS ASKING PEOPLE TO GIVE HIM SOME SPACE.
People forgetting he’s still just a kid. 😑😑 pic.twitter.com/oSzz1pPmrE
— Abhinav MSDian™ (@Abhinav_hariom) June 5, 2026
“>
நீண்ட தூரப் பயணத்தால் களைப்படைந்திருந்தவைபவ், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் ஒருகட்டத்தில் இரு கைகளைக் கூப்பி ரசிகர்களிடம் தன்னை வழிவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
மறுபுறம், வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய திறமையைப் பார்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், பிசிசிஐ-க்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். வைபவ் போன்ற ஒரு அபூர்வ திறமைசாலியை தாமதிக்காமல் உடனடியாக இந்திய சீனியர் டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்று ஐசிசி நிகழ்ச்சியில் அவர்அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 9 முதல் ஜூன் 21 வரை நடைபெறவுள்ள இந்த முத்தரப்பு தொடரில் வைபவ் மீண்டும் தனது பேட்டிங் மேஜிக்கைக் காட்ட ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
