மதுரை மாவட்டம் ஆத்திகுளம் என்ற பகுதியில் சர்க்கரை என்ற 65 வயது நபர் வசித்து வருகிறார். இவர் நாராயணபுரம் மந்தை அம்மன் கோவில் அருகே யாசகம் பெற்று அந்த கோவில் பகுதியில் படுத்து உறங்கி வந்துள்ளார். இவருடன் இணைந்து நாராயணபுரம் பகுதியில் சேர்ந்த முருகன் என்ற 43 வயது நபரும் உறங்கியுள்ளார்.

இந்த நிலையில் சர்க்கரை பீடி பிடிக்கும் போது பார்த்த முருகன் தனக்கும் பீடி தரும் படி கேட்டுள்ளார். ஆனால் முருகனை சர்க்கரை ஆபாசமாக திட்டிய நிலையில் இதனால் ஆத்திரமடைந்த அவர் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது சர்க்கரை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.