உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், 16 வயது பள்ளிச் சிறுமி ஒருவரை இரண்டு நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அந்தச் சிறுமி தனது தம்பியுடன் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது, அங்கு வந்த இரண்டு நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளனர்.

​பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறி அழுததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் காவல்துறையை அணுகினர். இது தொடர்பாக ‘பிஎன்எஸ்’ (BNS) மற்றும் ‘போக்சோ’ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள மதுரா போலீசார், தலைமறைவாக உள்ள அந்த இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறுமிக்கு அவரது தம்பி முன்னிலையிலேயே இழைக்கப்பட்ட இந்தக் கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.