ஜல்பாய்குரி – ராம்நகர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒரு சிறுவன் தனது உடமைகளுடன் தவறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பி கீழே விழுந்ததைக் கண்டு அவனது சகோதரி கதறி அழ, அங்கிருந்த சக பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை (Emergency Chain) இழுத்துள்ளனர். ஆனால், பலமுறை சங்கிலியை இழுத்தும் ரயில் ஒரு இன்ச் கூட நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​இது குறித்து ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடமும் (TTE), ரயில்வே உதவி எண்ணிற்கும் பயணிகள் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. “ஒரு உயிர் போகும் நிலையில் இருந்தும் ரயில்வே ஊழியர்கள் காட்டிய அலட்சியம் கண்டிக்கத்தக்கது” என வீடியோ ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். ரயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் அவசரக்கால நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.