தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட ”16 வயதினிலே” திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு (80) இன்று காலமானார். கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலேயே, மகாநதி, எங்க சின்ன ராசா உள்ளிட்ட பல மெகா ஹிட் படங்களை தயாரித்தவர் இவர். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடலுக்கு இயக்குநர் பாரதி ராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்