அண்மையில் வெளியான திரைப்படங்கள் அனைத்திலும் மது மற்றும் புகைபிடித்தல் காட்சிகளை அதிகளவில் காட்டப்படுவதால் இளைஞர்களும் கெத்து காட்டுவதாக நினைத்து தாங்களாகவே போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுர மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்று போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள் பற்றியும் இன்றைய சினிமா வாழ்கை குறித்தும் பேசினார்.

அவர் பேசியதாவது, சினிமாவில் பல்வேறு நல்ல விஷயங்களை எடுத்து சொன்னாலும் புகை, மது போன்ற காட்சிகளை தொடர்ந்து காட்டுகின்றனர். இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் கூட அதை உடனே உள்வாங்கி கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். ஆகவே முடிந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு நான் படம் இயக்குவதாக இருந்தாலும் கண்டிப்பாக என் திரைப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என அவர் அறிவித்துள்ளார்.