
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சத்யராஜ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த அவர் வில்லன் வேடங்களிலும் அசத்துவார். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ். நடிகர் சத்யராஜ் திமுகவின் ஆதரவாளராக இருக்கும் நிலையில் அவருடைய மகள் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திவ்யா சத்யராஜ் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, நண்பரின் திருமணத்திற்கு சொகுசாக விமானத்தில் செல்லும் போலி அரசியல்வாதி கிடையாது உதயநிதி.
அதாவது ஏசி கேரவனில் ஏசி விமானத்தில் நண்பனுடன் நண்பன் கல்யாணத்திற்கு போகிற போலி அரசியல்வாதி கிடையாது என்று தன்னுடைய முதல் மேடையிலையே விஜயை கடுமையாக அட்டாக் செய்தார். உதயநிதி கடினமாக உழைக்கும் நாயகன். கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றுகளின் மீது நம்பிக்கை கொண்டவர். மழை மற்றும் வெள்ளம் என எது வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்யக்கூடியவர். பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன். அவரை எதிர்த்து யார் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் காலி. அவர் யாராலும் வெல்ல முடியாத நாயகன் என்று புகழாரம் சூட்டினார். மேலும் திமுகவின் வரலாறை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் சமீபத்தில் நடிகை திரிஷாவுடன் நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் சென்ற நிலையில் அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை விமர்சித்து தான் தற்போது தனி விமானத்தில் நண்பனுடன் நண்பன் திருமணத்திற்கு செல்லும் போலி அரசியல்வாதி உதயநிதி அல்ல என்ற விஜயை தன்னுடைய முதல் மேடையிலேயே விமர்சித்துள்ளார்.