முஸ்லிம் மக்களின் மிக முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகையானது பல நாடுகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2023 இந்த பண்டிகை பல நாடுகளிலும் ஜூன் 29ஆம் தேதி(இன்று) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளையும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருவேளை நாளை விடுமுறை அளிக்கப்பட்டால், சனிக்கிழமை நாளை மறுநாளும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை வருகிறது. இதனால், தொடர்ந்து தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறையாக அமையும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றனர்.