மாநில ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களுக்கு தனியாக பில் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக உத்தரவிட்டிருந்தது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மானிய தொகை தனியாகவும் மாநில அரசின் ஒதுக்கீடு மற்றும் மானிய தொகை தனியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ரேஷன் கடைகள் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

விற்பனையாளர்கள் ஒரு துண்டு சீட்டில் மக்களுக்கு வழங்கும் பொருட்களை எழுதி அதை எடை போடுபவரிடம் வாங்குவார். எடை போடுபவர் பொருளை வழங்கிவிட்டு அதனை கிழித்து விடும் பழக்கம் இருக்கிறது. எனவே மத்திய அரசின் இந்த திட்டத்தை தமிழக ரேஷன் கடைகளில் செயல்படுத்தினால் மக்களுக்கு மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விவரங்கள் முழுமையாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.