தமிழக அரசானது கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலம் திறன் பயிற்சி 1 வாரம் திற மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது முதல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தையூர் கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்ததாக நாவலூர் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவர்கள் இருபது வயதுக்குள் இருக்க வேண்டும். கொத்தனார், வெல்டர், பிளம்பர், கம்பி வளைப்பது உள்ளிட்ட தொழிலுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். தங்குமிடம், உணவு வசதி ஆகியவை இலவசமாக அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினமும் 800 ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.