ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு அமைச்சர்  சக்கரபாணி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எரிவாயு இணைப்பு இல்லாமல் 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு மாதம் 3லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்கள் பெரும் பாதிப்படைய உள்ளனர்.