வழக்கமாகவே ஏப்ரல், மே மாதத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெப்பநிலையை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் வெப்ப அலையில் இருந்து தப்பிக்கும் விதமாக முக்கிய அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு முன்பாகவே கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது கடும் வெப்பம் நிலவும் நேரமான நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்ட போக்குவரத்துக் காவலர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, நீண்ட நாள் நோய் உள்ளவர்கள் மேலும் வேறு சில நோய்க்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள் பணியில் ஈடுபட வேண்டாம் என்றும் இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியில் ஈடுபடுவதற்காக தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.