பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியால், தமிழகத்தில் அக்கட்சிக்குப் எந்த விதமான பின்னடைவும் இருக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “அது வட இந்தியா, இது தென்னிந்தியா; அது பீகார், இது தமிழ்நாடு. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் (JD(U)) ஏற்கெனவே ஆளுங்கட்சியாக இருந்துள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்ததில்லை. தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ், பாஜக காலூன்ற முடியாது. அதற்கு வாய்ப்பு கிடையாது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.