நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் கூடுதலாக 41 நகரங்களில் 5 ஜி சேவையை விரிவாக்கம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.
அதன்படி தமிழகத்தில் காரைக்குடி, கிருஷ்ணகிரி, தேனி, அல்லிநகரம்,ஊட்டி மற்றும் வாணியம்பாடி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தமாக 406 நகரங்களில் இந்த சேவையை கொண்டு சேர்த்துள்ள ஜியோ இதனை ஒவ்வொரு நகரத்திலும் சாத்தியமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
