தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், பனை சாகுபடியை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இரண்டு கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித்துறை உடன் இணைந்து பண்ணை சுற்றுலா செயல்படுத்த ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வாழைக்காக தனித் தொகுப்பு திட்டம் 130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.