தமிழ்நாடு அரசின் உயரிய பதவியான தலைமைச் செயலாளர் பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் யாருக்கு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இறையன்புவுக்கு பதவியை வழங்கினார். இந்த முடிவுக்கு பலரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் மே 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதன் காரணமாக யார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்க படலாம் என்று சிலர் கூறும் நிலையில், இறையன்புவுக்கு மீண்டும் தலைமைச் செயலாளர் பதவியில் தொடர விருப்பமில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

இதனால் இறையன்புவுக்கு அரசு துறைகளில் பணியாளர்களை நியமிக்கும் டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பொறுப்பை வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமைச் செயலாளர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன் ஆகியோர்களில் ஒருவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.