கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மாணவர்களை பொருத்தவரை படிப்பதற்காக வரக்கூடிய இடம்தான் பள்ளிக்கூடம். அதனால் ஆசிரியர்களும், அவர்களை சார்ந்தவர்களும் மாணவர்களை படிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வேறு விதங்களில் பயன்படுத்தினால் துறை ரீதியாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொதுத்தேர்வை மாணவர்கள் பதற்றமில்லாமல் அச்சமின்றி எழுத வேண்டும். கடைசி நேரத்தில் படிப்பதை தவிர்த்து விட்டு தற்போதையிலிருந்து படிக்க ஆரம்பித்தால் பேரூராட்சி தவிர்க்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.