கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,817 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 5,901 குறைந்திருப்பதாகவும் தேசிய சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன. காச நோயை முழுமையாக ஒழிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 2025 -ஆம் வருடத்திற்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் நோயாளிகளை கண்டறிதல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல் போன்ற காசநோய் ஒழிப்பு திட்ட பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக நோய் தாக்கத்தினால் பாதிக்கப்படும் நோயாளிகள் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையில் குணப்படுத்தப்படுவதாகவும் தொடர் சிகிச்சைகள் மூலமாக மீதமுள்ளவர்கள் குணமடைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1.34 லட்சம் பேருக்கு காசு நோய் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 5,901 பேருக்கு காச நோயின் பாதிப்பு இருந்தது. ஆனால் அவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 1,083 பேரும், அரசு மருத்துவமனைகளில் 4,818 பேரும் முதற்கட்ட சிகிச்சை பெற்றதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 13 சதவீதம் கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.