வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வு மண்டலமானது இன்று இலங்கை கரைப்பகுதியை கடக்க உள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று  வீசும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடி சீட்டு வழங்கப்படாததால் 1,800 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதே போல் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் மீனவர்களும் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் வளர்த்த காற்று வீச கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்டம் மீனவர்களும் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.