ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேனகா என்பவர் வேட்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய கணவர் நவநீதன் பாஜக கட்சியின் பணிக்குழு உறுப்பினர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தியில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என மேனகாவின் கணவர் நவநீதன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவரின் பள்ளியில் வேலை பார்த்தது உண்மைதான். ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே அந்த பள்ளியில் இருந்து நின்று விட்டேன். தற்போது நான் வேறொரு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்.

அந்த பள்ளி காங்கிரஸ் முன்னால் எம்பி ஒருவருக்கு சொந்தமானது. இதனால் நான் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனா? பிழைப்புக்காக வேலை பார்த்து தானே ஆக வேண்டும். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த எங்கள் கட்சியின் பொறுப்பாளர் கார்த்தி மற்றும் அவருடைய அண்ணனை அவர்களுடைய சொந்த மாமாவே குத்தி கொலை செய்துள்ளார். நாங்கள் இரண்டு நாட்களாக பிணவறையில் கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் என்னை பாஜக நிர்வாகி என்று கூறி போலியான தகவல்களை பரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.