ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு கே.எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி தரப்பு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு இதுவரை வேட்பாளரை அறிவிக்காதது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாஜக போட்டியிட்டால் தங்களுடைய முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்கும் எனவும், அவர்கள் போட்டியிடாவிட்டால் வேட்பாளரை அறிவிப்போம் என்றும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால் இதுவரை பாஜக வேட்பாளரை தேர்தலில் நியமிப்பது குறித்தும் யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. மேலும் பாஜக மௌனம் காத்து வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு அவர்களுக்காக காலத்தை கடத்தாமல் வேட்பாளரை நியமிக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இபிஎஸ் தரப்பு தேர்தலில் தீவிர களப்பணி ஆட்சி வரும் நிலையில் ஓபிஎஸ் கூட ஈரோடு கிழக்கில் படவில்லை என்று கூறப்படுகிறது. இப்படியே செல்வது ஓபிஎஸ் தரப்புக்கு நல்லது இல்லை என்பது தான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.