டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7986 கோடி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு விசாரணையின் போது வருமானவரித்துறை டாஸ்மாக் நிறுவனம் மதிப்பு கூட்டு வரியாக செலுத்திய 14 ஆயிரம் கோடி ரூபாய் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றும் மாநில அரசின் நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தது.

ஆனால் டாஸ்மாக் நிறுவனம் மதிப்பு கூட்டு வரி செலுத்தியதற்கு வருமானவரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது. மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு 2 வாரங்கள் இடைக்கால தடை விதித்ததோடு, வழக்கின் விசாரணை குறித்து வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.