தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 36 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் 20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கேரளாவை போன்று தமிழகத்தில் இருக்கும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கியாக உருவாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர். நாளை வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.