தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த திட்டமானது தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது.

தற்போது நடந்து முடிந்த 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் படி காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் தமிழக முழுவதும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.