பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்கள் பிரெய்லி எழுத்துக்களை படிக்க உதவும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவிகள் 2023-24 ஆம் வருடத்தில் பெற தேவையான விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

இதைப் பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இளநிலை கல்வி படிப்பவராகவோ அல்லது முதுநிலை கல்வி படிப்பவராகவும் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி, டெட் போட்டி தேர்வு பயிற்சி பெறுவராக இருக்க வேண்டும். பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும். மேலும் ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது