தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்பட்டு வரும் முக்கியமான பதவிகளை திமுக அரசு நிரப்பாமல் காலியாக வைத்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்கம் போன்றவற்றின் தலைமை பணியிடங்கள் காலியாக இருப்பதால் கூடுதல் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மற்றும் முதல்வரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாக தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மருத்துவக் கல்லூரிகளில் முதல்வராக பணியாற்றுபவர்களை இயக்குனர்களாக நியமிப்பதன் மூலம் அவர்களுக்கு வேலை பளு ஏற்படுகிறது. இதற்கு மத்தியில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியே காலியாக இருக்கிறது. இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு திமுக அரசின் திறமையின்மை தான் காரணம். இதனால் ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் மாண்புமிகு முதல்வர்  உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.