தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சரமாரியாக விமர்சித்து வருகிறார்.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது, “மணல் கொள்ளையைத் தடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது, தமிழகம் சந்தி சிரிக்கிறது” என்று விஜய் கடுமையாகத் தாக்கினார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக முக்கியப் புள்ளியான செந்தில் பாலாஜி, “திமுகவை விமர்சித்தால்தான் மற்ற கட்சிகள் மக்கள் மத்தியில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதால் விஜய் இப்படிப் பேசுகிறார்” என ஒரே வரியில் முடித்துக்கொண்டார்.
மேலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதாகவும், வரும் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
ஒரு பக்கம் விஜய் தனது கூட்டணியில் சேர மற்ற கட்சிகளுக்கு “அதிகாரத்தில் பங்கு” என ஆஃபர் கொடுத்தும் யாரும் வராத நிலையில், தனித்து நின்று ஆளும் அரசை அட்டாக் செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
