தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் சொத்துக்களை தமிழர்கள் திருடுவது போன்று பொய் பழி சுமத்தியுள்ளார்.

வடக்கில் தமிழர்களை காழ்ப்புணர்வுடன் பேசுவதும், மாநிலங்களுக்கு இடையே பிரச்சனையை தூண்டும் விதமாக பேசுவதும் ஒரு பிரதமருக்கு அழகா.? வாக்குக்காக தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து இப்படி ஒவ்வொரு நாளும் தரக்குறைவாக நடந்து கொள்வதை பிரதமர் மோடி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் பேசும்போது பூரி ஜெகநாதர் ஆலய கருவூல நிகழ்வுகளை பார்த்து ஒட்டுமொத்த ஒடிசா மக்களும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டுக்கு சென்று விட்டது என்று கூறுகிறார்கள். மேலும் அதை தமிழ்நாட்டுக்கு கொண்டு போனவர்கள் யார். இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா என்று பேசியுள்ளார்.