
குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
காப்பு காடுகளை சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு குவாரிகள் இயங்கக்கூடாது என்ற நடைமுறை இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு அதற்கான அந்த அனுமதியை வழங்கியிருந்தது. அதற்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். மீண்டும் அந்த விதிகளை விலக்க வேண்டும். சதுப்பு நில காடுகள், பாதுகாப்பு காடுகளை சுற்றிலும் குவாரிகள் இயங்கக் கூடாது என அறிக்கைகள் வெளியிட்டிருந்தார்கள். அதாவது, காடுகளில் பகுதிகளுக்கு அருகிலேயே குவாரிகள் போன்றவை எல்லாம் செயல்படக்கூடிய காரணத்தால் காடுகள் உடையவளம் பாதிக்கப்படும் அங்கு இருக்கக்கூடிய வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். இந்த இயற்கையினுடைய தகவல் அமைப்பு என்பது மாறக்கூடிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்நிலையில் அதற்கு தற்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள், உச்சநீதிமன்ற ஆணை மற்றும் மத்திய அரசினுடைய வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி நடைமுறைப்படுத்தப்பட்டதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டுதல்கள் படியே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் சரணாலயம் தேசிய பூங்காக்களுக்கு மட்டுமே இடைவெளி தேவை என குறிப்பிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளில் காப்பு காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளி பற்றி குறிப்பிடவில்லை.
1959 – 2021 நவம்பர் வரை காப்புக்காடு எல்லையிலிருந்து 60 கிலோ மீட்டருக்குள் குவாரி பணி கூடாது என்ற நிபந்தனையுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2021 இல் வெளியிடப்பட்ட விதி திருத்தத்திற்கு முன்பிருந்தே காப்பு காடுக்கான பாதுகாப்பு இடைவெளி தற்போதும் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் சட்டமுறைகளின் படியே வகுக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் ஆணைகள், மத்திய வனம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி விதிகள் வகிக்கப்பட்டுள்ளது.
குவாரி பணிகளை மேற்கொள்ளும் போது வரலாற்றுச் சின்னங்கள், பழந்தமிழ் கல்வெட்டுகள் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2021 நவம்பர் 3ல் வெளியான அரசாணைப்படி உப விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் உப விதி சேர்க்கப்பட்டது. உப விதி சேர்ப்பால் காப்புக்காடு எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்ள குவாரிகள் பாதிப்பு என உரிமையாளர்கள் முறையீடு செய்தனர். தடை காரணமாக டாமின் நிறுவனத்தின் 19 குவாரி உட்பட பல குவாரிகள் பாதிக்கப்பட்டன. குவாரி உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நலனை காத்திட விதிகள் திருத்தப்படும் என அறிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.