அரசு வேலையை கனவாக கொண்டு பலர் விடா முயற்சியுடன் நித்தம் படித்து வருகின்றனர். அதற்கேற்ற அடிப்படையில் வருடந்தோறும் மத்திய -மாநில அரசு சார்பாக பல்வேறு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அடுத்த 3 வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, 12 ஆம் மற்றும் கல்லூரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, ரூ.600 என வழங்கப்படும் இது பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.